இதுவரை 2800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள்!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அத்துடன், எலிக்காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் நாம்