இணையனுசரணை நாடுகளுடன் வலுவாக நிற்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் உறுதி

இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுடன் அமெரிக்கா வலுவாக நிற்பதாக
புலம்பெயர் தமிழர் கூட்டணியிடம் தெரிவித்துள்ள இலங்கைக்கான
அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை தான்
தனிப்பட்ட ரீதியில் சந்தித்தாகவும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களின்
கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இன்றியமையாததாகும் என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கின் ஏற்பாட்டில் கடந்த
செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி தூதுவருக்கும் புலம்பெயர் தமிழர்
கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நிகழ்நிலையில் சந்திப்பொன்று
இடம்பெற்றது.

இதன்போது இலங்கையிலுள்ள அமெரிக்க செயற்திட்டம் மற்றும் சர்வதேச
அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் என்பன தொடர்பில் புலம்பெயர்
தமிழர் கூட்டணியின் பிரதிநிதிகளால் தூதுவர் ஜுலி சங்கிடம் கேள்விகள்
எழுப்பப்பட்டன.

குறிப்பாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தினால்
வழங்கப்படும் உதவிகள் பின்தங்கிய சமூகப்பிரிவினர் மத்தியில் எவ்வாறு
நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுமென சில இலங்கை – அமெரிக்க
சமூகத்தலைவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அனைத்துத்தரப்பினரையும்
உள்ளடக்கிய முறைமையின் அடிப்படையிலேயே அவ்வுதவிகள் பகிரப்படுமென
அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் உறுதியளித்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்