
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் இறுதி வரை கோஹ்லி ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் 83*(52) ஓட்டங்களுடனும், பர்ஸ்டவ் 40*(28) ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.