இங்கிலாந்து வீரர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொயின் அலி ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான மொயின் அலி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மொயின் அலி, இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் ஐந்து சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்களாக இரண்டாயிரத்து 914 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 155ஆகும். சராசரி 28.29ஆகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் அவர் நான்கு சதங்கள் அடித்தார். இதுதவிர இடதுக்கை சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி, 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒரு போட்டியில் 112 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும். சராசரி 36.66ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்