இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் மேகனுக்கு உத்தரவு!

தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹரி – மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடியேறினர்.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், இளவரசி மேகனை, மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர்.

தனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு ‘மெயில்’ பத்திரிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்