இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் முஸம்மிலின் புதல்வி ஊவா மாகாண ஆளுநர் வெற்றி.

இங்கிலாந்தில் நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளூராட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஊடாக போட்டியிட்ட ஊவா மாகாணசபை ஆளுநர் ஏ.ஜே.எம்.  முஸம்மிலின் புதல்வி ஷஸ்னா முஸம்மில் வெற்றிபெற்றுள்ளார்.

அப்பிரதேசத்தில் இலங்கை வாக்காளர்கள் இல்லாதபோதிலும் இந் நகரை தெரிவு செய்து, அப் பிரதேசத்தில் தனது பிரசார சமூக சேவைகளைச் செய்து அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மனதை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மே மாதம் 5ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் ‘MSc in Development Management’ மற்றும் Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், சமூக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து வயது  முதியவர்களுக்கு  உதவுதல், கெயினாஷ் இளைஞர் அமைப்பு ஊடாக சிறுவர்கள் சிறையில் உள்ள பெற்றோர்கள் அவர்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமூக சேவைகளைச் செய்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்