ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிளிஸ்கோவா வெளியேற்றம் – 4வது சுற்றில் ஹெலப், நடால்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ஹெலப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) இன்று காலை நடந்த 3-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த பேப்லோ பஸ்டாவை எதிர் கொண்டார். இதில் நடால் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் பிரிட்சை வீழ்த்தினார்.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், கடந்த முறை அரை இறுதிக்கு நுழைந்தவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியாவை எதிர் கொண்டார்.

30-வது வரிசையில் உள்ள அனஸ்டசியா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல 6-வது வரிசையில் உள்ள பென்சிக்கும் (சுவிட்சர் லாந்து) 0-6, 1-6 என்ற கணக்கில் அனட்டிடம் (எஸ்டோனியா) தோற்றார்.

4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 6-11, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த யுலியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 17-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7, (4-7), 6-3 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த கேமிலா ஜியோரியை தோற்கடித்தார்.

முகநூலில் நாம்