ஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.

அம்மாகாணத்தில் கேப் யார்க் தீபகற்பத்தில் உள்ள லாக்ஹெர்ட் ஆற்றுப்படுகை அருகே விமானம் கட்டுப்பாட்டை இழந்து வானில் வட்டமிட்டது. இதையடுத்து அந்த ஆற்றுப்படுகையில் விமானத்தை தரையிறக்க விமானி முற்பட்டார்.


ஆனால், விமானம் தரையிறங்கியபோது ஆற்றுப்படுகையில் இருந்த மணல் மேட்டில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.

முகநூலில் நாம்