ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்

2020-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 20-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக கனடா நாட்டின் முன்னணி வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு அறிவித்துள்ளார். பியான்கா டென்னிஸ் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளார்

கடந்த அக்டோபர் மாதம் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடிய போது கால் முட்டியில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே, ஆஸ்திரேலியா ஓபனை தவற விடுவதாக பியான்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவர் 19 வயதான பியான்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் நாம்