ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சரண்யா (படங்கள் இணைப்பு) 

யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சரண்யா மோகன்

இவர் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தார் இவர் பெற்றோர் மோகன் மற்றும் களமண்டலம் தேவி

இருவரும் பேபி டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளி வைத்துள்ளனர் அதில் நடன ஆசிரியராகவும் உள்ளனர்

அதோடு சரண்யாவும் அவரது தங்கை சுகன்யா இருவருமே பரதநாட்டியம் கற்றுள்ளனர்

சரண்யா ஆலப்புழாவில் உள்ள சென் ஜோசப் காலேஜ் போர் வுமன்னில் இங்கிலீஷ் லிட்ரேச்சர்றில் டிகிரி முடித்து உள்ளார்

அதோடு சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி ma டிகிரி முடித்துள்ளார் சரண்யா படித்த பள்ளியில் நடந்த ஒரு விழாவில் அவரது நடனத்தை பார்த்த இயக்குனர் பாசில்

அவரது பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய 1997 இல் வெளியான அணியதிப்பிரவு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்

தமிழ் ரீமேக்கான காதலுக்கு மரியாதை படத்திலும் அவர் நடித்துள்ளார் அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு பின் படிப்பில் கவனம் செலுத்தினார்

பின்னர் ஒரு நாள் ஒரு கனவு படம் தொடங்கி தமிழ் சினிமாவில் சில படங்களிலும் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார்

அதோடு 2014-ல் வெளியான படியாப்பூர் பாய்ஸ் என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனை 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி ஆலப்புழாவில் உள்ள கொட்டம்குலம் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்

இவர்களுக்கு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு அனந்தபத்மநாபன் என பெயர் சூட்டியுள்ளனர்

தற்போது முழுநேர வேலையாக தன் குடும்பத்தை கவனித்து வருகிறார் நடிகை சரண்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்