
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின்தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்புஅமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன்உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்ததீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்புதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும்விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் எனகுறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனைபெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களதுநன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக்கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளதை அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின்அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்தவெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராதுபாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள்கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும்ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச்சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியதுஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.