
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் பதிவில் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்துள்ளார்.
அரகலயவை கலைப்பதற்கு பலத்தை பிரயோகித்ததை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கண்டிக்கின்றது. அமைதியான ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை,இந்த அரசாங்கத்தின் இவ்வாறானதொரு முதலாவது நடவடிக்கையான இது கண்டிக்கப்படவேண்டியது மேலும் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்த மக்களின் நம்பிக்கைக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.