
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கியதுடன் அவரிடமிருந்து டி-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கி நேற்று முன்தினம் சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்தின் அடியில் இருந்து இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மீட்கப்பட்டு வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.