ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கோருகின்றார் சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மகளிர் அணியின் முன்னாள் செயலாளர் சி.விமலேஸ்வரியிடம் 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்

கரவெட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதின்நான்கு நாட்களுக்குள் அவரிடம் இருந்து பதில் கிடைக்கப் பெறாத பட்சத்தில் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

போரினால் வாழ்வை இழந்த வடக்குக் கிழக்கு பெண்களுக்குப் புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த 21கோடியே 20 இலட்சம் எங்கே? சுருட்டியது யார்? என்ற தலைப்பில் விமலேஸ்வரி ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

கட்சித் தலைவராகிய தனக்கோ அல்லது பொதுச் செயலாளராகிய துரைராஜசிங்கத்துக்கோ எந்த அறிவுறுத்தலும் வழங்காமல் தன்னிச்சையாக, உண்மைக்குப் புறம்பாக, வதந்திகளைப் பரப்பியுள்ளதாக கூறி விமலேஸ்வரியையும் அவரோடு ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஏனைய நால்வரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்