
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 4 ஆவது போட்டி இன்று (03) ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கடாவி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.
நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன்படி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழந்து 334 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan 112 ஓட்டங்களையும் Najmul Hossain Shanto 104 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Mujeeb Ur மற்றும் Rahman Gulbadin Naib தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 50 ஓவர்களில் 335 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.