ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வைத்த குறியில் குழந்தைகள் பலி

தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்;பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா இராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தலிபன் அறிவித்துள்ளது.

தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது என பிபிசி மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்