
வேலி கடந்து சிங்கக் கூண்டுக்குள் சென்ற நபர் ஒருவரை சிங்கமொன்று கடுமையான தாக்கிக் கொன்ற சம்பவம் கானாவிலுள்ள மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது.
ஆபிரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் சடலத்தை சிங்கத்தின் கூண்டுப் பகுதியிலிருந்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர் என அதிஹகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உட்புற வேலிக்கு உட்பட்ட பகுதியில சிங்கமொன்றினால் தாக்கப்பட்டதால் இந்நபர் உயிரிழந்தார் என கானாவின் வனத்துறை ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கக்குட்டியொன்றை எடுத்துச் செல்வதற்காக இந்நபர் சிங்கக் கூண்டுப்பகுதிகள் வேலி தாண்டி சென்றுள்ளார் என உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும் இந்நபரின் நோக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பின், மேற்படி கூண்டில் ஒரு ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் மற்றும் இரு சிங்கக்குட்டிகள் பாதுகாப்பாக காணப்பட்ட என அறிவிக்கப்பட்டுள்ளது.