ஆடம்பர வீட்டைக் காலி செய்யவுள்ள இங்கிலாந்து பிரதமர் “ரிஷி சுனக்“

இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் பிரதமர் ஆகிய பின் தனது ஆடம்பரமான வீட்டை காலி செய்துவிட்டு சிறிய வீட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

 இங்கிலாந்து நாடு தற்போது கடும் பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில் ஆடம்பர பங்களாவில் அதிக வசதிகளுடன்கூடிய வீட்டில் இருந்ததாக ரிஷி சுனக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பிரதமராகி உள்ளதால் ரிஷி சுனக்  தனது குடும்பத்துடன் ஆடம்பர பங்களாவை காலி செய்துவிட்டு சிறிய வீட்டிற்கு மாறியுள்ளார். அந்த வீட்டின் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ. 7000 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன என்பதும் இந்த சொத்து மதிப்பு இங்கிலாந்து அணியின் சொத்து மதிப்பை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பிரதமர் பதவிக்காக சிறிய வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்