ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுச்சென்ற பொலனறுவை மக்கள்!

பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏனைய குறைபாடுகள் குறித்து  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றனர்.

 

இதனையடுத்து இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை தமக்கு பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மக்கள் சந்திப்பு பொலனறுவை-அ்தனகடவல பிரதேசத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அப்பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

முகநூலில் நாம்