ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க சீன அணிக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 40 பேர் கொண்ட சீன அணிக்கு ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள கடும் முயற்சிக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 40 பேர் கொண்ட சீன அணிக்கு இந்த போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. 

சீன அணியினருக்கு விசா வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கருத்து தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே தற்போது வீரர்களின் உடல் நலம் மிகவும் முக்கிய பிரச்சினையாகும். சீன அணியினருக்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்ததற்கான காரணத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றார்.

முகநூலில் நாம்