ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் மிரட்டலான தோற்றம்! வைரலாகும் போஸ்டர் இதோ

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜூன். ஹீரோவாக ஒரு நேரத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.

தற்போது முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் குருச்சேத்திரா, ஹீரோ, கொலைகாரன் படங்கள் வெளியாகின.

தற்போது 16 ம் நூற்றாண்டில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சலி மரைக்காயர் வரலாற்று படத்தில் ஆனந்தன் என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் இப்படத்தில் மோகன் லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க ரூ 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்படுகிறது.

தற்போது அர்ஜூனுடைய தோற்றம் பற்றிய போஸ்டர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

முகநூலில் நாம்