ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் QR முறையின் பிரகாரம் வழங்க தீர்மானம்

இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறையை ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் உரிமம் (QR) முறையின் பிரகாரம் மட்டுமே எரிபொருள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (26) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்கவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்