அஸரெங்காவை வீழ்த்தி 3 ஆவது முறையாகவும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஒசாகா

நவோமி ஒசாகா அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விக்டோரியா அஸரெங்காவை தோற்கடித்து, தனது மூன்றாவது கிராண்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

அதன்படி ஒசாகா, பெலருசிய வீராங்கனை அஸரெங்காவை 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் மூன்று ஆண்டுகளில் தனது இரண்டாவது அமெரிக்க பகிரங்க பட்டத்தை கைப்பற்றியுமுள்ளார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஆர்தர் ஆஷே அரங்கில் நடைபெற்றது.

இப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் பெலருசியாவைச் சேர்ந்த விக்டோரியா அஸரெங்கா ஆகியோர் மோதினார்.

முதல் செட்டை 6-1 என அஸரெங்கா எளிதில் கைப்பற்றினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஒசாகா 2 ஆவது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனால் 2 ஆவது செட்டை 6-3 என ஒசாகா கைப்பற்றினார். 2018 அமெரிக்க ஓபன் மற்றும் 2019 அவுஸ்திரேலிய ஓபன் வென்ற ஒசாகா, அவர் விளையாடிய ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளிலும் வென்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்