
இலங்கை அணிக்கு எதிரான முதல் சர்வதேச 20 க்கு 20 போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று(07) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
சரித் அசலங்க 26 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பானுக்க ராஜபக்ஸ மற்றும் அணித்தலைவர் தசுன் சானக்க ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.
ஜொஷ் ஹசீல்வூட் 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
129 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 14 ஓவர்களிலேயே கடந்தனர்.
அணித்தலைவர் எரோன் பின்ச் 61 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 70 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிபெற செய்தனர்.
அதற்கமைய, 03 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் 1 – 0 என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
தொடரின் இரண்டாவது சர்வதேச 20 க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(08) நடைபெறவுள்ளது.