அவுஸ்திரேலியாவில் அதிக பெண்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவியேற்பு

அவுஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை இன்று (01) பதவியேற்றது.

புதிய அமைச்சரவையில் அதிகமான பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மத சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய அமைச்சரவையில் அதிகளவான பெண்களை முக்கிய பொறுப்புகளில் உள்வாங்கி பிரதமர் Anthony Albanese சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஸ்காட் மொரிசன் (Scott Morrison)தலைமையிலான முந்தைய Liberal-National கூட்டணி அரசாங்கத்தில் இருந்த ஏழு பேரை விஞ்சும் வகையில், 30 உறுப்பினர்களைக் கொண்ட Albanese-இன் அமைச்சரவையில் மொத்தம் 13 பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் கென்பராவில் இடம்பெற்று நிகழ்வில் தொழில்துறை அமைச்சராக Ed Husic மற்றும் இளைஞர் அமைச்சராக Anne Aly ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

இதேவேளை, பூர்வீக அவுஸ்திரேலிய அமைச்சகத்தில் பதவி வகிக்கும் முதல் பழங்குடி பெண்ணாக Linda Burney வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்