அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சில் கொரோனா மரணம் 50 வீதம் அதிகரிப்பு

முன்னைய வாரத்துடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சில் கொவிட் உயிரிழப்புகள் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளன. ஒமிக்ரோன் துணை வேறுபாடு மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது 16 ம் திகதி வரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்  முன்னைய வாரம் 92 மரணங்களே நிகழ்ந்துள்ளன.

மாநிலத்தில் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை 12000மாக இந்த வாரம் அதிகரித்துள்ளது. நியுசவுத்வேல்சில் உயிரிழந்தவர்களில் 13 வீதமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என சுகாதார அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களில் நான்கு டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் ( 20 வீதம்) உள்ளனர் எனவும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்