அழிவை சந்தித்து வரும் சிவப்பு பண்டா கரடிகள்: GPS கருவிகள் மூலம் கண்காணிக்கும் ஆய்வாளர்கள்

நேபாள மலைகளில் அழிவை சந்தித்து வரும் சிவப்பு பண்டா கரடிகள் தொடர்பில் வனவிலங்கு ஆர்வலர்கள் செய்மதியூடாக ஆராய்ந்து வருகின்றனர்.

குறித்த பாலூட்டி இனம் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை கிழக்கு இமாலயம் மற்றும் தென்கிழக்கு சீனப் பகுதிகளில் சில ஆயிரக்கணக்காகக் குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கஞ்சஞ்சங்கா மலையில் அவை பயணிக்கும் தூரம் தொடர்பில் கண்டறிவதற்காக 10 பண்டாக்களில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த GPS கருவிகள் சிறப்பாகத் தொழிற்படுவதாகவும், அவற்றிலிருந்து முக்கியமான தரவுகள் பெறப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முகநூலில் நாம்