அறிக்கையை வெளியிட்டது கிண்ணியா படகுப் பாதைகள் குழுவினர்

கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கிண்ணியா – ´குறிஞ்சாக்கேணி´ படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

விபத்திற்குள்ளான 6 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27 ஆம் திகதி உயிரிழந்தார். அதன்படி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது தாயுடன் பாடசாலைக்கு செல்வதற்காக படகில் பயணித்த வேலையில் தாய் உயிர் தப்பிய நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

கடந்த 23.11.2021 அன்று காலை இந்த படகு விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்