
அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை மேற்கொண்ட வியாபாரிகள் மீது நேற்று (13) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அரிசியின் நிர்ணய விலை காட்சிப் படுத்தாது அரிசி விற்பனையில் ஈடு பட்டமை, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்தவர்கள் மற்றும் அரிசியை பதுக்கி வைத்த சில வர்த்தகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.