அரிசி விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் அரிசி விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.

கையிருப்பிலுள்ள அரிசியை சந்தைக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, அரிசி ஆலை உரிமையாளர்களால் தற்போது சந்தைக்கு தேவையான அரிசி விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிறுபோக நெல் அறுவடையும் கிடைக்கவுள்ளதாக உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

முகநூலில் நாம்