அரச விருது வழங்கும் விழாக்களை வழமைபோன்று நடாத்துமாறு ஆலோசனை

அரச விருது வழங்கும் விழா மற்றும் கண்காண்காட்சிகளை இந்த வருடத்தில் வழமைபோன்று நடாத்துமாறு கலாசார அமைச்சு, உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சாஹித்திய விழா, நாடக விழா, தொலைக்காட்சி விருது வழங்கல் விழா உள்ளிட்ட அரச விருது வழங்கும் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

இதற்கான திட்டங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் கலாசார அமைச்சுக்கு கையளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்