அரச நிறுவனங்களுக்கான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை!

அரச நிறுவனங்களுக்கான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மொரட்டுவையில் தளபாட வேலைகளில் ஈடுபடுவோர் சிலர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பத்தரமுல்லை – தலவத்துகொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழித்து, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்குமாறு இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்