
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் புராதன மற்றும் கலாச்சார தொல்பொருள் சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்குமாறு மக்களிடம் தொல்லியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட் அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த புராதன மற்றும் கலாச்சார தொல்பொருள் சொத்துகள் பாரியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் தொல்லியல் திணைக்களம் கோரிக்கை விடுக்கிறது. நாட்டு மக்களால் தொல்பொருள் நினைவு சின்னங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகள் மேலும் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் தொல்பொருள் சொத்துக்களை திருடுதல் மற்றும் அவற்றுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்றவற்றிக்கு தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.