
அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு இது தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.