அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

“2020 ஜனவரி முதலாம் திகதி முதல் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு அதே முறையில் முன்னெடுக்கப்படும்.

கடந்த 2016 ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படும். இந்த அதிகரிப்பு காரணமாக 2015 உடன் ஒப்பிடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதமாக அதிகரிக்கும்.

2016ஆம் ஆண்டு வெளியான சுற்றறிக்கையின் ஐந்து கட்டங்களின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை, தலா இரண்டாயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2016ஆம் ஆண்டு முதலாம் முதல் நான்கு சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாம்கட்ட சம்பள உயர்வு நாளை அதிகரிக்கப்படும்” என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்