
நாட்டின் அரசியல் மற்றும் பாெருளாதாரம் ஒன்றுக்கொன்றுபின்னிப்பிணையப்பட்டது. அதனால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல்பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர்ஷரித்த ஹேரத் தெரிவித்தார்.சுதந்திர மக்கள் காங்கிரஸின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக அரசியல்மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான மூலாேபாய திட்டம்கொள்கை பிரகடன புத்தக வெளியீடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.நாட்டு மக்களுடன் கலந்துரையாடி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.அதன் ஆரம்ப நிகழ்வாக அரசியல் மறுசீரப்பு மற்றும் பொருளாதாரஅபிவிருத்திக்கான மூலாேபாய கட்டமைப்பு ஆகிய கருத்துக்களம் புத்தகங்கள்இரண்டை வெளியிட்டிருக்கின்றோம்.நாங்கள் மிகவும் பிரச்சினைக்குரிய காலகட்டத்திலேயே இருக்கின்றோம்.பொருளாதார பிரச்சினை, அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே இருந்துவருகின்றோம். அரசியல் பிரச்சினையை இனம் காணாமல் பொருளாதாரநெருக்கடியில் இருந்து எங்களால் மீள முடியாது. அதனால்பின்னிப்பிணைந்திருக்கும் அரசியல், பொருளாதாரம் என்ற பிரச்சினையில்இருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தையே நாங்கள்ஆரம்பித்திருக்கின்றோம்.அத்துடன் எமது இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஊழல்மோசடிகளை ஒழித்து, அரசியல் பொருளாதாரம் கலந்த அரசியல் பயணத்தை நாங்கள்மேற்கொள்ளவேண்டும்.நாடு சுதந்திரமடைந்தது முதல் பல பொருளாதார மூலாேபாய திட்டங்கள்அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை மேற்காெண்டிருக்கின்றோம்.ஆனால் இந்த வேலைத்திட்டங்கள் இரண்டையும் ஒன்றாக மேற்கொள்ளக்கூடிய பலம்மிக்க அரசியல் உருவாக்கம் ஒன்றை நாட்டுக்குள் ஸ்தாபிக்க எங்களுக்குமுடியாமல் போயிருக்கின்றது. எமது நாட்டில் இருக்கும் சம்பிரதாய அரசியல்சிந்தனைகளே இதற்கு காரணமாகும்.அதனால்தான் நாட்டின் அரசியல், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. இதன்பெறுபேறாகவே இளைஞர்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தார்கள்.அதனால்தான் சுதந்திர மக்கள் காங்கரஸ் பலம் மிக்க அரசியல், பொருளாதாரத்தைகட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளை கூட்டிணைத்துக்கொண்டு வேலைத்திட்டம்அமைப்பதற்கு தீர்மானித்தோம். அதன் ஆரம்ப நிகழ்வாகவே இந்த கலந்தரையாடல்இடம்பெறுகின்றது.அதனடிப்படையில் அரசியல் மறுசீரமைப்புக்கான மூலோபாய திட்டம் என்றபுத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம். இதில் எமது எதிர்கால அரசியல்மறுசீரமைப்புக்கான கொள்கையை தெரிவித்திருக்கின்றோம்.இந்த புத்தகத்தை கருத்துக்களமாக எடுத்துகொண்டு மக்களின்கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என இதன் மூலம் நாங்கள்எதிர்பார்க்கின்றோம். எனவே குடும்ப அரசியல், புரட்சிகர அரசியலைதோற்கடித்து, இந்த கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியல் பயணத்தைமேற்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.