அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக் காலம் நேற்றுடன் (09) நிறைவடைந்துள்ளது.

அதற்கமைய, நேற்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1,842 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 138 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் 42 கோப்புகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, ஆணைக்குழுவிற்கு மீள கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த 42 கோப்புகளில் 15 முறைப்பாடுகளுக்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

முகநூலில் நாம்