அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும்
பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று  தமிழர் விடுதலைக்
கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த
என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை
எனவும் குற்றம் சுமத்தினார்.

அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ரணில்
விக்கிரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர்.

அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்மந்தனும் திருட்டு தனமாக நாடாளுமன்றம்
சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர்.
இதனால் ரணில் தோற்றார். அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர். சமஷ்டியை
செல்லா காசாக்கினார்கள்.

அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று
நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும்
ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால்
சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும்
தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.

எம் இனத்தை காட்டி குடுத்த சம்மந்தன் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக
நாடாளுமன்றத்துக்கு சென்றவர், நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி அற்றவர்.
இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றும்
ஆகபோவதில்லை”  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்