அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஜனாதிபதி அறிவிப்பு!

தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பின்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடோ்தே அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், துணை ஜனாதிபதி பதவிக்கு நான் போட்டியிடுவதை பொதுமக்கள் விரும்பவில்லை.

இதுதொடா்பான கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் துணை ஜனாதிபதியாகும் தகுதி எனக்கில்லை என்பது தெரிய வருகிறது.

மேலும், அவ்வாறு தோ்தலில் நான் போட்டியிடுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் பெரும்பாலானவா்கள் கருதுகின்றனா்.

எனவே, பொதுமக்களின் விருப்பத்திணங்க நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றாா் அவா்.

கடந்த 2016 ஆண்டு முதல் பிலிப்பின்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் ரோட்ரிகோ டுடோ்தே, பொதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், அவரது அதிரடியான அரசியல் பாணி பல முறை சா்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப் போவதாக டுடோ்தே அறிவித்தாா்.

பிலிப்பின்ஸ் அரசமைப்புச் சட்டத்தின்படி ஒருவா் ஒரு முறை மட்டுமே 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும். இந்த நிலையில், அவா் மீண்டும் துணை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்தச் சூழலில், தோ்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக டுடோ்தே தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்