அரசியலமைப்பை உருவாக்கவே மக்கள் ஆணை வழங்கினர்- மகா சங்கத்தினர்.

நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகவே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம், அட்டமஸ்தானவில் ஜனாதிபதி இன்று (சனிக்கிழமை) சமயக் கிரியைகளில் ஈடுபட்ட நிலையில் மகா சங்கத்தினர் மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மக்களின் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக நிறைவேற்றி தன்னிறைவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதிவின் பயணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, இன்று முற்பகல் லங்காராமய, மிரிசவெட்டிய மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைகளுக்குச் சென்ற நிலையில் விகாராதிகாரி தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.

லங்காராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, விகாராதிகாரி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரரை சந்தித்து உரையாடினார்.  அத்துடன், விகாரையின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி புனித பூமிக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் உரையாடினார்.

மேலும், மிரிசவெட்டிய விகாராதிகாரி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட அவர், ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரரைக்கு சென்று சங்கைக்குரிய நுகேதென்னே ஸ்ரீ பஞ்ஞானந்த தேரரை சந்தித்து உரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்