அரசாங்கத்தின் உள்ளக ரீதியிலான பொறிமுறைகள் எதனையும் ஏற்கோம் – வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை
ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை.
அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களும்
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் அவர்களை
மனிதாபிமானத்துடன் அணுகவில்லை.

எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால்
உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் எம்மால்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வடக்கு, கிழக்கு வலிந்து
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சனி
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்