அயர்லாந்து-வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

வங்காளதேசம் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் இம்மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் அயர்லாந்து-வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முகநூலில் நாம்