அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையில் சமுர்த்தி மீளாய்வுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையில் சமூர்த்தி மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மாவட்ட  சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில்  மாவட்டங்களில் இடம்பெறுகின்ற மக்களுக்கு தேவையான  சேவைகளை பூர்த்தி செய்வதற்குஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மீளாய்வு கூட்டத்தின் பின்னர் அறிவியல் நகரில் சமூக சேவைத் திணைக்களத்தினால்  அமைக்கப்பட்டு வரும் மாற்று வலுவுடையவுடையவுருக்கான தங்கி நின்று கல்வி கற்பதற்கு மற்றும் செயலமர்வுகள் அனைத்து வசதிகளும் கொண்டு அமைக்கப்பட்டுவரும் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான திறன் அபிவிருத்தி  கட்டிடத் தொகுதியை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

இக் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின்  தலைவர் முருகேசு சந்திரகுமார், சமுர்த்தி ஆணையாளர் நாயகம், பணிப்பாளர்கள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஆரணி தவபாலன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்  மற்றும் சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முகநூலில் நாம்