அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று பதவிப்பிரமாணம்

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03) பதவியேற்க உள்ளதாக அரசியல்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்
பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம்
முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்