அமெ­ரிக்க பொலிஸ் பிரி­வொன்றின் இணை­யத்­த­ளத்தை முடக்­கிய முன்னாள் ஊழியர்!

அமெ­ரிக்க நக­ர­மொன்றின் பொலிஸ் நிலைய இணை­யத்­த­ளத்தை முன்னாள் ஊழியர் ஒருவர்  முடக்­கி­யுள்ளார். சம்­பளப் பிரச்­சி­னையே இதற்­கான கார­ணம் என கூறப்படுகிறது.

மசா­சூசெட்ஸ் மாநி­லத்தின் நியூட்டன் நகர பொலிஸ் நிலைய இணை­யத்­த­ளமே இவ்­வாறு முடக்கப்­பட்­டது.

அந்­ந­கரின் மேயர் ருதானே புவெல்லர் இது தொடர்­பாக கூறு­கையில், இப்­பொலிஸ் பிரிவின் தகவல் தொழில்­நுட்ப பணிப்பாள­ராக பணி­யாற்­றிய ஒரு­வரால் இந்த இணை­யத்­தளம் முடக்கப்பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி பொலிஸ் இணை­யத்­த­ளத்­துக்குச் செல்­ப­வர்கள் நகர மேய­ருடன் தொடர்­பு­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்தும் தகவல் ஒன்று அந்த இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது,

2 மாதங்கள் இந்த இணை­யத்­தளம் முடக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அதை இயக்­கு­வ­தற்­கான அதிகாரம் நியூட்டன் பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைக்­க­வில்லை.

அதனால், வேறு ஒரு இணை­யத்­தளம் உரு­வாக்­கப்­பட்­டது.

கடந்த மார்ச் மாதம் மேற்­படி ஊழியர் வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். அவ்­வே­ளையில் தனக்கு 137,000 டொலர் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட வேண்டியுள்ளதாக கருதிய அவர், இணையத்தளத்தை முடக்கியிருந்தார் என மேயர் ருதானே புவெல்லர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்