அமெ­ரிக்க பொலிஸ் அதி­கா­ரியின் கையைக் கடித்த யுவதி கைது!

அமெ­ரிக்க பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் கையை கடித்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கெனக்­டிகட் மாநிலத்தின் நவ்­கேடுக் நகரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கைது செய்­யப்­பட்­டவர் 21 வய­தான ஆஷ்லி சலட்ஸ் என பின்னர் அடை­யாளம் காணப்பட்டுள்ளார்.

வீடொன்றில் திருட்டுச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக தகவல் கிடைத்­த­வுடன் அதி­காலை 2.00 மணி­ய­ளவில் பொலிஸார் அங்கு சென்­றனர்.

சந்­தேக நப­ரான யுவதி அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்ளார் என்­பது தெரி­ய­வந்­தது.

பின்னர் அந்த யுவ­தி­யிடம் பொலிஸார் விசா­ரிணை நடத்­தினர். போதை­யி­லி­ருந்த அந்த யுவதி, மேற்­படி வீடு தனது நண்பர் ஒரு­வ­ரு­டை­யது எனவும்,  குளிர்­சா­த­னப்­பெட்­டி­யி­லி­ருந்து மதுபானத்தை எடுத்து அருந்­தி­ய­தா­கவும் அவர் கூறினார்.

அவ்­வீட்­டுக்குள் ஆஷ்லி பல­வந்­த­மாக புகுந்த நிலையில், வீட்டின் கதவு, ஜன்­னல்­க­ளுக்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.  

பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைக்க மறுத்த ஆஷ்லி, பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் கையையும் சிகிச்சை அளித்த உத்தியோகத்தர் ஒரு­வரின் கையையும் கடித்தார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

பின்னர், மருத்­து­வ­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்ட ஆஷ்லி, பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

அவர் மீது, திருட்டு, அரச அதிகாரி ஒருவரை தாக்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்