
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் வருகை தரவுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
ரோமில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு சார்பில் இலங்கைக்கு வரும் மெக்கெய்ன், இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.