அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தற்கொலைப்படை தாக்குதல் – துனீசியாவில் துணிகரம்

துனீசியா தலைநகர் துனீசில் அமெரிக்க தூதரகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தூதரகத்திற்கு அருகே வந்த மர்ம நபர்கள் 2 பேர் தன்னை தானே வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

உடலில் வெடிகுண்டு பெல்ட் கட்டிய படி பைக்கில் வந்த நபர்கள், அமெரிக்கா தூதரகத்திற்கு செல்லும் சாலையில் இருந்த பாதுகாப்பு ரோந்து வாகனத்தை குறிவைத்து இத்தாக்குதலில் ஈடுபட்டதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவரும் பலியாகினர். போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.முகநூலில் நாம்