
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த நெட் பிரைஸ், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தும் தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.