அமெரிக்கா பிராந்திய வைத்தியசாலையில் துப்பாக்கி சூடு; நால்வர் பலி!

அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma) பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரும் இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை எந்த தகவல்களும் வௌியாகவில்லை.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சமீபத்திய சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

பாடசாலையில நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்